கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வும், சிநேகபூர்வ T-20 கிரிக்கெட் போட்டியும் ஞாயிற்றுக்கிழமை (23) ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மீராவோடை மீரா விளையாட்டுக் கழக தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற T-20 கடின பந்து போட்டியில் மீராவோடை மீரா, சாய்ந்தமருது பிலையிங் கோர்ஸஸ் ஆகிய அணிகள் பங்குபற்றின.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய மீரா அணியினர் 13 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிலையிங் கோர்ஸஸ் அணியினர் 9 ஓவரில் 6 விக்கட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர்.
இப் போட்டியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிலையிங் கோர்ஸஸ் அணிக்கு ஓட்டமாவடி ஸெய்க்கா ஹோல்ட் ஹவுஸ் நிறுவனத்தால் பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக் கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக கல்குடா சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் கே.பி.அப்துல் ஜப்பார் மற்றும் பிரதேச விளையாட்டுக் கழக தலைவர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment