மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட திறப்பு விழாவுடன் இணைந்ததாக சைக்கிளோட்டப் போட்டி



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட திறப்பு விழாவுடன் இணைந்ததாக, விளையாட்டு அமைச்சு மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்டல் சங்கத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் சைக்கிளோட்டப் போட்டி தொடர்பாக ஆளும் தரப்பு பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 10ஆம் திகதி நெடுஞ்சாலை அமைச்சு கேட்போர் கூடத்தில் இந்த ஊடக மாநாடு நடைபெற்றது. ஜனவரி 14 ஆம் திகதி காலை 8:30 மணிக்கு மீரிகம இடைப்பரிமாற்ற வீதியில் ஆரம்பமாகி அதிவேகப் பாதையில் யக்கபிட்டிய இடைப்பரிமாற்ற வீதி வரை சென்று, அங்கிருந்து மீரிகம இடைப்பரிமாற்ற வீதியில் திருப்பி மீண்டும் அந்த வீி ஊடாக மீரகிகம இடைபாற்றத்திற்கு அருகில் போட்டி நிறைவடையும். இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 125க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர். வெற்றியாளர்களுக்கு ரூ.50,000.00, ரூ.30,000, ரூ.25,000, வீதம் பரிசில் வழங்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கனிஷ்ட மற்றும் திறந்த ஆண்களுக்கான சூப்பர் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு ரூபா 100,000, ரூபா 75,000 மற்றும் ரூபா பணப்பரிசுகள் வழங்கப்படும்.
செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க சைக்கிளோட்ட சம்மேளனம் இந்த போட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.இதற்கு முன்னர் நெடுஞ்சாலை திறக்கப்பட்ட போது பொது மக்கள் பார்வையிடுவதற்கு சில நாட்களுக்கு திறந்து வைக்கப்பட்டதுடன், சைக்கிளோட்டப் போட்டி நடத்த அனுமதிக்குமாறும் கோரப்பட்டது. இந்தச் சைக்கிளோட்டப் போட்டி நடத்த ஒருக்கிணைப்பு நடவடிக்கை மேற்கொண்டு சைக்கிளோட்டப் போட்டி நடத்த உதவியதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சைக்கிள் ஓட்ட சாம்பியன்களுக்கு நெடுஞ்சாலையில் சர்வதேச அனுபவத்தைப் பெறுவதற்கும் விளையாடுவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். அதிமேதகு ஜனாதிபதி மற்றும் அதிமேதகு பிரதமர் அவர்களின் தலைமையில் இம்மாதம் 15ஆம் திகதி மாலை 4 மணிக்கு அதிவேக நெடுஞ்சாலை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையின் கீழும், அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடனும் நாங்கள் நெடுஞ்சாலையை திறந்து வைக்க இருக்கிறோம். பெண்களுக்கான சைக்கிள் ஓட்டும் போட்டி நிகழ்வை நடத்துமாறு எனக்கு நினைவூட்டிய ஊடகங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :