ஆலையடிவேம்பில் பள்ளப்பாமங்கைவெள்ளத்தில் அள்ளுண்ட விவசாயி புளியம்பத்தையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆலையடிவேம்பு பட்டிமேடு வடக்கு பள்ளப்பாமங்கை துரிசில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அள்ளுண்டு செல்லப்பட்ட விவசாயி நேற்று முன்தினம் (04) புளியம்பத்தை கிராமத்தின் முன்பகுதியில் உள்ள நரகக்குழி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பட்டிமேடு வடக்கு பள்ளப்பாமங்கை துரிசில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நேற்றுமுன்தினம் அள்ளுண்டு செல்லப்பட்ட புளியம்பத்தை கிராமத்தை சேர்ந்த 57 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
ஆற்றின் நடுப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக மீனவர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற உறவினர்கள் அதிகாரிகளின் அனுமதியின் பிரகாரம் தோணியின் மூலமாக சடலத்தை ஆற்றின் கரையோரமாக கரை சேர்த்தனர்.
குறித்த துரிசில் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் வெள்ள நீரை வெளியேற்ற துரிசில் பலகையை கழற்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலத்தை குறித்த இடத்திலிருந்து வீட்டுக்கு கொண்டுசெல்ல காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஸ்தலத்திற்கு விரைந்து வாகனத்தை வழங்கி உதவிசெய்தார்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தொடரும் அடை மழையினால் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
0 comments :
Post a Comment