வருடாந்த ஒன்றுகூடலுடன் சான்றுதழ் வழங்கி வைப்பு!





பைஷல் இஸ்மாயில் -
ட்டு. புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத தள வைத்தியசாலையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் தேசிய உற்பத்தித்திறனுக்காக பாடுபட்டு உழைத்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுச் சான்றுதழ்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் (திருமதி) ஜே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன், கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவு வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ், கணக்காளர் என்.பாலநந்தன், நிருவாக உத்தியோகத்தர் (திருமதி) எஸ்.நவேந்திரராஜா உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு அரச அலுவலகங்களில் வினைத்திறன் மிக்கதான சேவை மதிப்பீடு செய்யும் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலாவது தடவையாக மட்டு. புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத தள வைத்தியசாலை பங்குபற்றி அதில் விஷேட பாராட்டுச் சான்றிதழை பெற்றுள்ளதையடுத்து இதற்காக உழைத்த வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரைப் பாராட்டிய சாான்றிதழ்களை இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது, கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :