பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த க.பொ.த.உயர்தர மாணவர் தின விழா அண்மையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது
பாடசாலை முதல்வர் எம்.சபேஸ் குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவியும் , களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியருமான டொக்டர்.என்.பிரசாந்தினி பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களோடு தனது கற்றல்
அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள உயர்தர கலை,, வர்த்தக , விஞ்ஞான , தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment