ஓட்டமாவடியில் மாட்டிறைச்சிக்கு குழப்பமான விலையேற்றம்: பிரதேச சபை தலையீடு செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மாட்டிறைச்சிக் கடைகளில் திடீரென விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேச சபை மாட்டிறைச்சியை விற்பனை செய்ய கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்துள்ள நிலையில், குறித்த பகுதியிலுள்ள சில மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த பகுதியில் ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை 1000, 1100, 1200 ஆகிய குழப்பமான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, இது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை உடனடியாக தலையீடு செய்து விலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று நுகர்வோர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :