அரச அலுவலகங்களில் நேற்று (03.01.2022) 2022ம் ஆண்டை வரவேற்கும் நிகழ்வு நாடலாவிய ரீதியில் இடம் பெற்றது.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் 2022ம் வருடத்தை வரவேற்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப கடமை சபதத்தினை உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியப்பிரமானம் செய்ததுடன் இனிப்பு பண்டங்களும் பரிமாறப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன், பிரதி திட்டமிடல்; பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், கணக்காளர் எம்;.ஐ. சஜ்ஜாத் அஹமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ. அப்துல் ஹமீட் ஆகியோர் உட்பட உத்தியேகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment