தைப்பொங்கலை முன்னிட்டு கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி



காரைதீவு சகா-
மிழர்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அமரர் வை.நல்லரெத்தினம் ஞாபகார்த்தமாக காரைதீவு விளையாட்டுக்கழகம் நடாத்திய வருடாந்த கடற்கரை கரப்பந்தாட்ட (பீச்சொலிபோல்-Beach Volleyball) சுற்றுப்போட்டி கடந்த 3தினங்களாக நடைபெற்று நேற்று(15) இறுதிப்போட்டி இடம்பெற்றது.

காரைதீவு கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. 14அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கேஎஸ்ஸி(KSC)கழகத்தின் இருஅணியினர் மோதினர்.
அணி 'எ'வீரர்களான வை.வருணுஜன் வி.டிலக்ஷன் சாம்பியன்களாகவும் அணி'பி' வீரர்களான பி.சுலக்ஷன் பி.அனோஜன் றன்னஸ்அப் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.

சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்புவிழா கழகத்தலைவர் வெ.அருள்குமரன்(ஆசிரியர்) தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்.
கௌரவஅதிதிகளாக கழகப்போசகர்களான பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன், உத்தரவுபெற்றநிலஅளவையாளர் வே.இராஜேந்திரன், உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு அதிதிகள் வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தனர்.
கழகச்யெலாளர் எஸ்.கிருஷாந்த் நன்றியுரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :