கிழக்கு உள்ளுராட்சி தலைவர்கள்மத்தியில் அமைச்சின்செயலாளர் வீரசேகர
வி.ரி.சகாதேவராஜா-உலகில் எதுவும் நிரந்தரமல்ல. மாற்றங்கள் ஒன்றே மாறாதது. எனவே புத்தாண்டில் நல்லது நடன்னும் என நம்பிக்கையுடன் கருமமாற்றுவோம்.
இவ்வாறு உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டபிள்யு.எம்.எம்.பி.வீரசேகர கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மத்தியில் தெரிவித்தார்.
"நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் காலத்தை நீடிப்பதா அல்லது முடிவுறுத்துவதா? என்பது இன்னும் இருவாரங்களில் தெரியும்.அதுவரை பொறுத்திருங்கள்" என்றும் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்:
அரசுக்கு நிதிநெருக்கடி நிலவுவதை அறிவீர்கள். வெளிநாட்டுவருமானங்கள் குறைந்துவருகிறது. வாகன ஆடைத்தொழிற்சாலைகள் குறைவடைந்த்pருக்கின்றது. பொருட்களின்விலை அதிகரித்துவருகின்றது.இன்றைய பொருளாதார நெருக்கடிகளை நீங்கள் அறிவீர்கள்.எந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தாலும் இத்தகைய நெருக்கடிகளை சந்தித்தே ஆகவேண்டும். டொலரின் ; மதிப்பு அதிகரித்துசெல்கிறது. ருபா குறைகிறது. காலஞ்செல்ல சுற்றுலாத்துறை வழமைக்குதிரும்பும். அனைத்தும் படிப்படியாக வழமைக்குத் திரும்பும். எதுவும் நிரந்தரமல்ல.என்றார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான இரண்டுநாள் வதிவிடச்செயலமர்வு கொழும்பு மத்துகம குக்குலேகங்க லாயா லெய்சர் நட்சத்திரவிடுதியில் நடைபெற்றது.
நீண்ட காலத்திற்குப்பிற்பாடு நடைபெற்ற கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான இரண்டுநாள் வதிவிடச்செயலமர்வு என்பதால் பெரும்பாலான சபைகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஜரோப்பிய யூனியனின் நிதிஅனுசரணையுடன் ஜக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளுராட்சி மன்றங்களின் திறன்அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் இவ்வதிவிடச்செயமலர்வு நடைபெற்றது.
இரண்டாம்நாள் அமர்வில் பிரதமஅதிதியாக மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் டபிள்யு.எம்.எம்.பி.வீரசேகர கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அவர் மேலும் பேசுகையில்:
வருமானம் குறைந்த சபைகள் நினைத்தால் நிச்சயமாக அபிவிருத்தி காணலாம். தலைவர்கள் நினைக்கவேண்டும். முயற்சியாண்மை கலாசாரத்தை ஏற்படுத்தி ஏற்றுமதிகளை அதிகரிக்கவேண்டும்.
"நான்" என்ற கருத்தை விட்டு "நாங்கள் " என்ற கருத்துடன் எமதுநாடு என்ற சிந்தனையுடன் பணியாற்றவேண்டும்.நாடு முன்னேறவேண்டுமானால் தனிநபர் முன்னேறவேண்டும்.
பொதுமக்களுக்கான சேவைகளை உரியநேரத்தில் உரியநடைமுறைகளின்படி செய்யவேண்டும். தற்போது டெங்கு காலம். 347 மன்றங்கள் நாட்டிலுள்ளன. ஆனால்டெங்கு வேலைத்திட்டங்களை பெரும்பாலான சபைகள் முன்னெடுக்கவில்லை என்பதை அறியமுடிகிறது.இது கவலைதரும் விடயமாகும்.
நான் அண்மையில் பாசிக்குடாவிற்கும் மீகமவிற்கும் சென்றிருந்தேன் அங்கு நிறைய கழிவுப்பொருட்களை காணக்கூடியதாயிருந்தன. அதனை சுத்தமாகவைத்திருக்கவேண்டிய பொறுப்பு உங்களைச்சார்ந்தது.
பண்டாரவளை நகரசபை தலைவரின் முன்மாதிரியை அனைவரும் அறியவேண்டும். அவரால் முடியுமென்றால் உங்களால் ஏன்முடியாது?. நல்லவேலைத்திட்டங்களை முனனெடுத்து சபைகளின் வருமானத்தை வலுப்படுத்தி சிறந்த மக்கள்சேவைகளைச்செய்யவேண்டும். என்றார்.
அமைச்சின் சட்டஆலோசகர் உள்ளூரட்மன்றங்களில் ஏற்படும்; சட்டச்சிக்கல்கள் பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார்.
உள்ளுராட்சிமன்றங்களை வலுப்படுத்தும்; உபாயங்கள் பற்றி விளக்கமாக கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு உள்ளுராட்சிமன்றத்தலைவர்களதும் கருத்துகள் பெறப்பட்டன.
0 comments :
Post a Comment