இதேவேளை, 666,480 ஓய்வூதியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக மாதாந்தம் 5,000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.75 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் சற்றுமுன் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
இதேவேளை, 20 பேர்ச் காணியில் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்குஞ 5,000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கும் குறைவான 20 பேர்ச்களுக்கு மேல் உள்ள வீட்டுத்தோட்டங்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே தொகையை இரு தரப்பினருக்கும் திரும்ப வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி மாதாந்தம் கிலோ ஒன்று 80 ரூபா என்ற விலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் முழு வரிகளிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கான விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதேபோல், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடி தீர்வுகளை வழங்குவதற்காக நிதியளிப்பு வழங்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைச்சரவை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment