2022 ஆம் ஆண்டின் முதல் திகதியில் சத்திய உறுதியுரையுடன் அரச பணியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் தேசியக் கொடியை பணிப்பாளர் ஏற்றி வைத்ததுடன்இ தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்ஷான் மன்சூர், சமயத் தலைவர்கள் கலாநிதி அக்ரகரே கஸாப நாயக்க தேரர், கலகம தம்ரம்சி நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபுசர்மா குருக்கள். அருத்தந்தை கலாநிதி சிக்டஸ் குருகுலசூரியஇ அஷ்-செய்க் கலாநிதி ஹஸன் மௌலானா ஆகியோர் சமய ஆசிகளை வழங்கியதுடன் பேராசிரியர் வைத்தியக் கலாநிதி எஸ்.எல்.எப்.அக்பர் அவர்கள் கொரோனா நோய் பாதுகாப்பு தொடர்பான விளக்கம் ஒன்றினை வழங்கியதுடன் பணிப்பாளர் புதிய வருடத்தின் ஆரம்ப வேலைகள் தொடர்பான உரையையும் நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment