ஜனவரி மாதத்திலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் எந்தப் பிரச்சினையும் வராது. அதற்கான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுத்து வருகிறோம். இவ்வளவு கூட எம்மால் இதனைக் கொண்டு செல்ல முடியாது என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய டொலர் நெருக்கடி குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் குறிப்பிடுகையில்:-
எமது கையிருப்பானது $7 Billion ஆக இருந்தது. எனினும் 2019ம் ஆண்டில் நாம் $7 Billionயை கடனாக செலுத்தினோம். அப்படியானால் எமது வெளிநாட்டு கையிருப்பானது பூச்சியமாக இருக்கவேண்டும் அல்லவா?. ஆனால் நாம் மீண்டும் 2020ம் ஆண்டில் $7 Billionயை கடனாக செலுத்தினோம். 2021ம் ஆண்டில் மீண்டும் நாங்கள் $6.5 Billionயை செலுத்தியிருக்கிறோம். அப்படியானால் தற்போது வெளிநாட்டு கையிருப்பு மறைப் பெறுமானத்தில் அல்லவா இருக்கவேண்டும்? ஆனால் தற்போது எம்மிடம் $3 Billionக்கு நெருங்கிய வகையில் வெளிநாட்டு கையிருப்பு காணப்படுகிறது அதனை மட்டும் 'கவனத்தில் கொள்ளாமல் எமது உள் வருகை மற்றும் வெளிச்செல்கையை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும். எவ்வளவு நிதி உள்வருகிறது, எவ்வளவு நிதி வெளிச்செல்கின்றது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதனைத் தான் நாம் தற்போது சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொண்டு செல்கின்றோம். எமது வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு பல சந்தர்ப்பங்களில் கூடும் குறையும். அதனைவிட முக்கியமானதாக எமக்கு வரும் மற்றும் வெளிச் செல்லும் நிதியின் போக்கையே பார்க்கவேண்டும். அவற்றை நாம் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யும் பட்சத்தில் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள முடியும் அதைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறோம்.
அதன்படி எதிர்வரும் மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி தொடர்பில் எந்த பிரச்சினையும் வராது. நிச்சயமாக அதற்கான நடவடிக்கைகளை தற்போதிலிருந்தே எடுத்து வருகிறோம். தற்போது கூட நாம் அதனை செய்திருக்கிறோம். இவ்வளவு கூட எம்மால் இதனை கொண்டு செல்ல முடியாது என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம் என்றார்.
0 comments :
Post a Comment