தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் பொன்விழா நிகழ்வுகளை ஒட்டியதாக அம்பாறை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த பொன்விழா நிகழ்வுகள் மாவட்ட முகாமையாளர் ஏ. மசூரின் தலைமையில் கல்முனையில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் இன்று (16) இடம்பெற்றது.
தேசிய கொடி மற்றும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை சுமத்ராராம மகா விகாரையின் விகாராதிபதி ரணமுத்துக்கல சங்கரத்ன தேரர், கல்முனை ஹாமியா அரபுக் கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எப்.எம். ஆஷிர் (ரியாழி), காரைதீவு குழந்தை யேசு தேவாலய போதகர் அருட்தந்தை அண்டனி ஜெயராஜ், காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலய குரு மகேஷ்வர குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினர்.
இந்நிகழ்வில் மேலும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment