கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளரும் முன்னாள் அம்பாரை மாவட்ட செயலாளருமான டி.எம்.எல் பண்டாரநாயக்கவுக்கு பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளருமான எம்.ஐ. நிர்பானின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை துஆப்பிரார்த்தனையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. லத்தீப், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். ரஹ்மத்துல்லா, அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம் சபீஸ், இறக்காமம் பிரதேச செயலக திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஆஹிர், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.தெளபீக், அக்கரைப்பற்று அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலய அதிபர் எம். ஐ.உவைஸ் ஆகியோருடன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் இங்கு மெளலவி ஏ.ஏல்.ஐயூப் பிரதம செயலாளருக்காக ஆசி வேண்டி விஷேட துஆப் பிராத்தனையை நடத்தினார்.
செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலையில் தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் இவருக்கான வரவேற்பு அன்றைய தினம் மாலை அக்கரைப்பற்றில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment