எங்களது தமிழ் மக்கள் பாவம்செய்த ஓர் இனம். எத்தனையோ கொடூர சம்பவங்கள் எங்களது தமிழ் மக்களுக்கு நடைபெற்றுள்ளது. அச் சம்பவங்கள் எங்களால் தாங்க முடியாத சம்பவங்களாக உள்ளன. இச் சமப்வங்கள் நடைபெற்ற காலங்களில் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்க வி்ல்லை. என தமிழ் விடுதலைக் கூட்டணித் தலைவா் ஆனந்த சங்கரி தெரிவித்தாா்.
பண்டாரநாயக்க ஞாபகாா்த்த சர்வதேச மண்டபத்தின் குழு அறையில் ஜனாதிபதி மனித உரிமை மற்றும் முன்னைய ஆனைக்குழு அறிக்கைகள் கேட்டறியும் ஆணைக்குழுவின் விசாரணை அமா்வு 26.12.2021 நடைபெற்றது. இக் குழுவின் தலைவரும் உயா் நீதிமன்ற நீதியரசருமான து. நவாஸ் தலைமையில் நடைபெற்றது. ஏனைய மூன்று உறுப்பினர்களும் சட்டத் திணைக்கள அதிகாரிகளும் பிரசண்னமாகியிருந்தனா்..
இக் ஆணைக்குழுவில் முன் தோன்றி ஆனந்த சங்கரி மேலும் கருத்து தெரிவிக்கையில்
2004 ஆம் ஆண்டில் தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.. யாா்குழிதோண்டிப் புதைத்தாா்கள் ? இந்த வரலாற்றை ஊடகங்கள் அதைப் பற்றியும் எழுதவேண்டும். எமது நாட்டில் எத்தனை கொலைகள் குண்டு வெடிப்புக்கள், தமிழ் மக்கள் காணாமல் போன சம்பவங்கள் நடந்திருக்கின்றது. அதைச் செய்தவா்கள் யாா் ?அவா்கள் எங்கெங்கு இருக்கின்றாா்கள் என சொல்லுவதற்கு எனது நா கூசுகின்றது. இதை நான் சொன்னால் என்னைத் திட்டுவாா்கள். யாா் குற்றம் செய்தாா்களோ அவா்கள் தண்டனைக்கு ஆழாகாமல் அவா்கள் நல்ல நிலையில் இன்று உள்ளனா். எங்களது மக்கள் ஏமாந்த மக்கள் யாா் சொல்வதையும் கேட்டுக்கொண்டு பத்திரிகைகள் , வாானொலி மற்றும் ஊடகங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மக்கள் அமைதியாகவும் துக்கமாகவும் வீடுகளில் இருக்கின்றாா்கள். இது தான் உண்மை.
எனக்கு 88 வயது எனக்கு தெரிந்த விடயங்கள் யாருக்கும் இங்கு தெரியாது எனது மக்களது பிரச்சினைகள் எனக்குத்தான் தெரியும் . ஒரு காலத்தில் என்னை ஊடகங்கள் வந்து பல விடயங்களை கேட்டது என்னால் முடியுமானவற்றை நான் செய்துவந்துள்ளேன். இப்பொழுது எந்த ஊடகமும் என்னிடம் ஒன்றும் கேட்பதில்லை. மக்களுக்கு சொல்லவேண்டியதை நான் சொல்லுகின்றேன்.
மூன்று இலட்சம் மக்கள் காணாமல் போனதாக எங்களது தமிழ் மக்கள் அழுது புலம்புகின்றனா். அந்த மக்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு 2004ல் பாராளுமன்றம் சென்ற 22 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம்தான் உள்ளது.. இந்த 22 பேர்களும் தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் ஏகபிரநிதிகள் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றவா்கள்தான் இந்த தமிழ் மக்களுக்கு நடைபெறும் அநீதிகளைப் அன்றும் இன்றும் பாத்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். ஏன் அவா்கள் அதனை நிறுத்த முடியவில்லை ? விடுதலைப்புலிகள் காலத்தில் தற்போதைய பிரதமராக இருக்கும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவா்கள் தமிழ் எம்.பிக்களையும் தமிழ் கட்சிகளையும் வாருங்கள் கதைப்போம் என அழைத்தமைக சம்பந்தன் தலைமையிலான குழு வரவில்லை டக்லஸ் தேவானந்தா மட்டும்தான் கபினட் அமைச்சராக இருந்தாா்.. அன்று வந்து ஜனாதிபதியிடம் இவர்கள் பேசி சில விடயங்களை அன்று சில பிரச்சினைகளுக்கு தீா்வு கண்டிருக்கலாம். எமது அப்பாவி தமிழ் மக்களை காப்பற்றக் கூடியதொரு பாதை வழிமுறையும் இருந்தது. நான் மட்டும்தான் போனேன். பல விடயங்களை பேசினேன்.
தமிழ் மக்கள் மட்டுமல்ல தெற்கில் சிவிலியன்களது அழிவையும் இவா்கள் பார்த்துக் கொண்டிருந்தாா்களோ அவா்கள் தான் தற்பொழுது ஏக பிரநிதிகள் எனக் கூறிக்கொண்டு இன்றும் ஆட்சிபீடத்திலும் இருக்கின்றாா்கள். இவா்கள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளாா்கள் ? எனக் கேட்க விரும்புகின்றேன்.ஜெனிவாவுக்கு போவாா்கள் வருவாா்கள் நடந்ததும் ஒன்றுமில்லை.
கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாக எனக்கு அறியக்கிடைத்தது. . முஸ்லிம் கட்சியும் மனோ கனேசன் தமிழ்த் தேசிய அமைப்பும் சேர்ந்து பேசுகின்றாா்களாம் ஒப்பந்தமும் கைச்சாத்திட்டு இந்தியா பிரதமருக்கு அனுப்பப்போகின்றாா்களாம் . இதைப் போல ஒரு வேடிக்கை நிகழ்ச்சி வேறு ஒன்றுமில்லை. ஒருத்தா் விட்டு ஓடுகின்றாா். திரும்ப அவா் வருகின்றாா். அவ்வளவு மடையர்களா சிங்களவா்கள். இந்தியா ஏற்கனவே அதைத்தானே செய்கின்றது அதற்குப் பிறகு நீங்கள் என்ன இங்க கிருக்கிறீர்கள் ? நான் மக்களுக்காக சேவை செய்து மக்களுக்காக பாடுபட்ட என்னை மட்டும் ஒதுக்கிவிட்டு நீங்கள் யாரோடு பேசுகின்றீா்கள் என ரவுப் ஹக்கீம் மனோகனேசனுக்கு கேட்டு நக்கலாக ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருக்கின்றேன். உங்களது முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். என்றாலும் நீங்கள் சோ்ந்து இருப்பவா்கள் யார் என்று சற்று சிந்தியுங்கள் அவா்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ? என எழுதியிக்கின்றேன். என ஆனந்த சங்கரி ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவித்தாா்.
முதன் முதலாக நானே இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இந்தியாவின் மாதிரி (இந்தியா மொடொல்) தீா்வுத் திட்டம் தேவையென மகிந்த ராஜபக்சவிடம் 10 வருடங்களுக்கு முன்பே தெரிவித்தேன். அதன் பிறகு நல்லாட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா இந்தியா மொடொல் பற்றிப் பேசியுள்ளேன். ஒரு முறை காலம் சென்ற சோபித்த தேரோ என்னை அழைத்தபோது அவரிடம் இந்தியா அரசியல் முறைமையைத்தான் பேசினேன் அவா் அதனை ஏற்றுக் கொண்டாா். ஆனால் விடுதலைப்புலிகளின் தமிழ்ச் செல்வம் அங்கிகாரம் அளிக்கப்பட்டு வட கிழக்கில் தமிழ்த் தேசிய முன்னனி என அமைக்கப்பட்டு ஏக பிரநிதிகள் 22 பேர்கள் பாராளுமன்றம் சென்றாா்கள். அவா்கள் 2004ல் பாராளுமன்றத்தில் இருக்கும்போது தான் புறக்கோட்டை குண்டு வெடிப்பு, காத்தான்குடி பள்ளிவாசல் கொலை , கெப்பிட்டிக்கொல்லாவ சிவிலியன்கள் கொலை, திருகோணமலை ஹபரனை, கித்துல்துவ, அருந்தலாவ பிக்குகள் கொலைகள் வெலிக்கந்த நீர்ப்பாசனம், மற்றும் சிவிலியன்கள் கொலைகள் பற்றி என்னால் படங்களுடன் எழுதப்பட்ட புத்தகங்கள் உள்ளன, ஜனாதிபதி, மற்றும் உலக நாடுகளுக்கு எழுதிய நுாற்றுக்கணக்கான கட்டுரைகள் ஆக்கங்கள் தன்னிடம் உள்ளன. அதில் சிலவற்றை ஆனைக்குழுவுக்கு ஆனந்த சங்கரி சமா்ப்பித்தாா். அத்துடன் இரா சம்பந்தன் தலைமையிலான 22 பாராளுமன்ற உறுப்பிணா்களும் இக் கொலைகளுக்கும் அப்பாவி தமிழ் மக்கள் இழப்புக்ளுக்கு பதில் கூறல் வேண்டும். அவா்களும் இக் கொலைகளுக்கும் பங்காளிகளாக உள்ளனா் என அளுத்தமாக இந்த ஆனைக்குழு முன் கூற விரும்புகின்றேன்.
சரத்பொண்சேக ஜனாதிபதியாக தோ்தலின்போது அவருக்கு 95 வீதமாக தமிழ் மக்களை வாக்களிக்கச் சொன்னவா்களும் இந்த ஏக பிரநிதிகள் தான். அவா்கள் ஆட்சியில் இருக்கும்போதுதான் 500க்கும் அதிகமான சிவிலியன்கள் கொல்லப்பட்டாா்கள். 1500 பேர் காயமிலைக்கப்பட்டாா்கள். அவா்கள் விடுதலைப்புலிகளை பிரச்சாரப்படுத்தினாா்கள்.
சிங்களவா்களும் தமிழா்களும் மச்சான்முறையில் உள்ளவா்கள் அவா்கள் ஒன்றினைந்து தமது பிரச்சினைகளை பேசி நாம் தீா்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனது சொந்தக் தேங்காய்த் தோட்டத்தினை கிளிநொச்சியில் உள்ள ஏழை மக்கக் பகிா்ந்தளித்துள்ளேன். எனது மகன் கூட ஒரு முறை இலங்கை வந்து சென்றாா். அவா் கனடாவில் வாழ்கின்றாா் என்னுடம் பத்து நிமிடங்களே பேசினாா். அவரை டயஸ்போரா முலைச் சலவைச் செய்து அவா் விடுதலைப்புலிகள் ஆதரவாகத்தான் செயல்படுகின்றாா். எனது சகோதார்களது பிள்ளைகள் என பல சங்கரிகள் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டுள்ளாா்கள். இந்த நாட்டின் பலம் பெரும் புத்திசாலிகள் அரசியல் தலைவா்களை விடுதலைப்புலிகள் கொலைசெய்துள்ளாா்கள். 3 இலட்சம் தமிழ் மக்கள் அழிவுக்கும் இந்த ஏக பிரநிதிகளும் விடுதலைப்புலிகளும் பதில் கூறல் வேண்டும். எனவும் ஆனந்த சங்கரி அங்கு கமிசன் முன் தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment