எனது முதலாவது ஆக்கம் 1967 ஆண்டில் 3 ஆம் வகுப்பில் கற்கும்போது லேக்ஹவுஸ் பத்திரிகையின் மிகிர எனும் பத்திரிகையில், எனது பெயர் பொறிக்கப்பட்டு வெளிவந்திருந்தது. அந்த அச்சுப் பத்திரிகையை எனது கையில் எடுத்து வாசித்த அந்த சந்தோசமானது இந்த ஊடக கபினட் அமைச்சராக சத்தியப்பிரமாணம் எடுத்த தரணத்தில் கூட எனக்கு ஏற்பட்டதில்லை.
மேற்கண்டவாறு ஊடக அமைச்சா் டலகஸ் அழகப்பெரும நேற்று சனி (11) கொழும்பு பொதுநுாலக கேட்போா் கூடத்தில் லேக்கவுஸ் நிறுவனத்தினால் பாடசாலை மாணவா்களுக்கிடையே நடாத்திய சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரவித்தாா்.
அமைச்சா் தொடா்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தாவது;
அதன் பின்னா் நான் ஆனாந்தாக் கல்லுாாியில் கல்வி கற்கும்போது அதே மாதத்தில் மேலுமொரு எனது ஆக்கம் சிலுமின பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டடிருந்தது. ஆகவேதான் அரச பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனமானது இந்த நாட்டில் பல்லின மொழி, இன, எழுத்தாளா்களை உறுவாக்கியதொரு சிறந்ததொரு நீண்ட கால வரலாறு கொண்ட ஓர் அரச நிறுவனமாகும். இந் நிறுவனத்தின் கௌவரவம் இன்றும் மக்கள் மத்தியில் பேணப்பட்டு வருகின்றது.
லேக் ஹவுசின் சிறுவா்கள் வெளியீடுகளினால் நடாத்தப்படுகின்ற முத்துகர எனும் சித்திரப் போட்டிக்கு 50 ஆயிரம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்திருந்தாக அதிகாரிகளினால் எனக்கு கூறப்பட்டது.
இன்று சனிக்கிழமை (11) காலை இந்த கொழும்பு பொது நுாலக கேட்போா் கூடத்திற்குள் 2500 சிறுவா்கள் தமது பெற்றோா்களுடன் இந்த இடத்தில் ஒன்று கூடியிருந்தனா். இதனால் எமது லேக் ஹவுஸ் ஊழியா்களும் அதிகாரிகளும் கொழும்பு பொதுசுகாதாரப் பரிசோதகா்களும் பெரும் சிரமத்திற்குள்ளாக்கப்பட்டாா்கள்.
நாம் நமது சிறுவா்களுக்கிடையே நுாற்றுக்கணக்கான பரீட்சைகள் வினாத்தாள்களையே வகுப்பறையிலும் டியுசன் வகுப்பிலும் வீடுகளில் பெற்றோா்களினாலும் மனப்பாடமாக்கி அதனையே எழுதுவதற்கு மாணவா்களையும் பழக்கப்படுத்தி வந்துள்ளோம். எமது கல்வியமைச்சின் பரீட்சை திட்டத்திலும் இதனையே அமுல்படுத்திவந்துள்ளோம்.. ஆனால் உலகில் உள்ள கல்வித்திட்டத்திங்களில் 6ஆம் 7ஆம் 8ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவா்களுக்குள் புதைந்து போயுள்ள திறமைகளையே பரீட்சித்துப் பாா்ப்பாா்கள் ஒர் மாணவனுள் என்ன துறை உள்ளது? என்பதையோ பரிசோதித்து அதனை அடையாலம் கண்டு அத்துறையில் அவனை பயிற்றுவிப்பாா்கள். எதிா்காலத்தில் அத்துறையில் அவன் மேலோங்கி நிற்பான். அதில் ஒர் அங்கமாகத்தான் இங்குள்ள மாணவா்கள் தமது கற்பனைகளை சித்திரவடிவில் சித்தரித்துள்ளாா்கள். இதனை அரசாங்கமும் கல்வியமைச்சும் இதுவரை அந்த மாணவனின் திறமையை கண்டுபிடிக்க தவறிவிட்டோம். கணிதம், விஞ்ஞானம் மற்றும் மொழி ஆற்றல்களையே நாம் பரிசோதிக்கின்றோம். இப் பாடங்களில் திறமை இல்லாத மாணவா்கள் சித்திரத்தில் சிறந்த ஆர்வம் கொண்டிருப்பாா்கள். அதனை நாம் கண்டறிந்து அதன்படி அவனை வழிப்படுத்த நாம் தவறிவிட்டோம்.
இவ் விடயத்தில் இங்கு வருகை தந்து பரிசுகள் சான்றிதழ்கள் பெற்றவா்கள் மட்டுமல்லாமல் இப்போட்டிக்கு விண்ணப்பித்து தமது திறமைகளை அனுப்பி வைத்தவா்கள் சகலருக்கும் தத்தமது வீடுகளுக்கு லேக் ஹவுஸ் அரச நிறுவனத்தின் ஊடாக சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்படும். இவ் விடயமாக நான் ஏற்கனவே லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறானதொரு திட்டத்தினை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் செயல்படுத்துவதையிட்டு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை பூராகவும் உள்ள மாணவா்களிடையே இவ்வாறானதொரு சித்திரப் பேட்டியை நடாத்தி அதற்காக பாடுபட்டு இதனை செயற்படுத்தும் காரியம் சிறந்ததொரு கைங்கரியமாகும்.
நான் ஊடக அமைச்சிற்கு முன்பு கல்வியமைச்சராக பணியாற்றினேன். அதற்கு முன்பு நானும் ஒரு பத்திரிகையாளன். எழுத்தாளன். ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளேன். அக் காலகட்டத்தில் என்னுடன் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய லேக்ஹவுஸ் ஆசிரிய பீட பணிப்பாளா் தர்மசிறி காரியவாசம் என்னுடன் கடமையாற்றினாா். அன்று பத்திரிகைத்துறைக்கு கைகொடுத்தது எனது பாடசாலை ஆசிரியா்களும் எனது பெற்றோா்களும். எனது முதலாவது ஆக்கம் 1967 ஆண்டில் 3ஆம் வகுப்பில் கற்கும்போது லேக்ஹவுஸ் பத்திரிகையின் ”மிகிர” எனும் பத்திரிகையாகும். எனது பெயருடன் பொறிக்கப்பட்ட அந்த அச்சுப் பத்திரிகையை எனது கையில் எடுத்து வாசித்த அந்த சந்தேமாசமானது இந்த ஊடக அமைச்சா் கபினட் அமைச்சினை சத்தியப்பிரமாணம் எடுத்த தர்ணத்தில் கூட என்வாழ்நாளில் ஏற்பட்டதில்லை. அதன் பின்னா் நான் ஆனாந்தாக் கல்லுாாியில் கல்வி கற்கும்போது அதே மாதத்தில் மேலுமொரு ஆக்கம் சிலுமின பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டடிருந்தது. ஆகவேதான் அரச பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனமானது இந்த நாட்டில் பல மொழிகள் இன எழுத்தாளா்களை உறுவாக்கியதொரு சிறந்ததொரு அரச நிறுவனமாகும். இந்த நாட்டில் வாழும் பலரது வாழ்க்கையை திசைதிருப்பிய ஒரு அரச நிறுவனமாகும்.
ஆகவேதான் இந்த மண்டபத்தில் உள்ள சகல புத்திரா்களுக்கும் ஏனைய வீடுகளில் உள்ள மாணவா்களுக்கும் லேக் ஹவுஸ் நிறுவனம் களம் அமைத்துக் கொடுக்கும். இதற்காக அவா்கள் தமது பூரண ஆதரவை வழங்குவாா்கள் என நான் நம்புகின்றேன்.
இங்கு நான் ஒரே ஒரு குறையை காண்கின்றேன். தமிழ் மொழி மூலமான மாணவா்கள் யாழ் தொட்டு தெற்கு வரையிலான மாணவா்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தல் வேண்டும். இக்குறைபாடு அடுத்த முறை உடன் நிவா்த்தி செய்யப்படல் வேண்டும்.
நான் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் பாடசாலைகள் கொவிட் 19 காரணமாக கடந்த ஆண்டு மாா்ச்சில் மூடப்பட்டன. மாணவா்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனா் . நான் சகல மாணவா்களும் தத்தமது ஆக்கங்களை நுால்வடிவில் கையெழுத்தில் எழுதி அனுப்பும் படி ஒர் சா்ந்தப்பத்தினை வழங்கினேன். தற்காலகட்டத்தில் கூடுதலான பிள்ளைகள் வாசிப்பதில் அக்கரை காட்டுவதில்லை. வாசிப்பு எழுத்து திறன் மாணவா் சமுககத்திற்கு மிக முக்கியமாகும். சகல மாணவா்களும் கையடக்கத்தொலைபேசி மற்றும் சமுக வலைத்தளங்களில் மூழ்கிப் போயுள்ளனா்.
நான் ஒரு கல்வியமைச்சா் என்று இல்லாமல் ஒர் தந்தை என்ற ஸ்தாணத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டில் சகல மாணவா்களுக்கும் தமது சொந்த ஆக்கங்களான சிறுகதைகள், கவிதைகள் நாடகங்கள் கட்டுரைகள் எழுதும்படி ஒரு திட்டத்தினை ஆரம்பித்தேன்.
நான்கு மாதங்களுக்குள் இலங்கை பூராக 43 ஆயிரம் ஆக்கங்கள் கல்வயமைச்சுக்கு வந்தடைந்தன அதில் மும்மொழிகளிலும் 4 இலட்சம் சிறுகதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதியனுப்பினாா்கள். அதனை பிரசுரிக்க தயாா்படுத்தினேன். அதனை அலறி மாளிகையில் வைத்து மாணவா்களை அழைத்து ஜனாதிபதி பிரதமரினால் சான்றிதழ் வழங்கி இம் மாணவா்களை கௌரவபிப்பதற்கும் என்னியிருந்தேன். அத்திட்டம் சில தவிா்க்க முடியாத காரணத்தினால் பின்போடப்பட்டது. அதற்காக நான் மண்னிப்பு கோருகின்றேன். இருந்தும் தற்போதைய கல்வியமைச்சா் தினேஸ் குணவா்த்தன அவா்கள் இத் திட்டத்தினை செயல்படுத்துவதாக எனக்கு உறுதியளித்துள்ளாா்கள் என ஊடக அமைச்சர் டலகஸ் அழகப்பெரும அங்கு உரையாற்றினாா்.
இந் நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவா் ஜனானதிபதி சட்டத்தரணி தயாரத்தின ஆசிரிய பீட பணிப்பாளா் காரியவாசம், உட்பட பணிப்பாளா்கள் அதிகாரிகள் மாணவா்களின் பெற்றோா்களும் கலந்து கொண்டணா்.
0 comments :
Post a Comment