லேக்ஹவுஸ் டிஜிட்டல் ஊடக முகாமையாளர் இடைநிறுத்தம் - ஊடக அமைப்புகள் கண்டனம்



J.f.காமிலா பேகம்-
லேக்ஹவுஸ் நிறுவன டிஜிட்டல் ஊடக முகாமையாளர் இடைநிறுத்தம் - ஊடகத்துறை அமைச்சரிடம் ஊடக அமைப்புக்கள் கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளன.

லேக்ஹவுஸ் செய்தி நிறுவனத்தின் டிஜிட்டல் ஊடகப் பிரிவின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ஊடகவியலாளர் மஞ்சுள சமரசேகர, கடந்த 2012/11/25 ஆம் திகதி முதல் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, (விசாரணை இலக்கமற்ற ) எழுத்துமூல கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு மாதமாகியும் வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும், லேக்ஹவுஸ் மனிதவள அத்தியட்சகரினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மஞ்சுள சமரசேக்கர தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை தனக்கு விளக்குமாறு கோரி, எழுத்து மூலம் தான் கடிதம் ஒன்றை லேக்ஹவுஸ் ஆசிரியர் குழு அத்தியட்சகருக்கு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர் மஞ்சுள சமரசேக்கர சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஆகியன விளக்கம் கோரி ஊடகத்துறை அமைச்சருக்கு வெவ்வேறாக கடிதங்களை அனுப்பியுள்ளன.

சுதந்திர ஊடக இயக்கம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த சூழ்நிலையில் ஊடகவிலாளர் மஞ்சுள சமரசேக்கர பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதுடன் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டுள்ளார் என்பதை நாம் இங்கு விசேடமாக விளக்க வேண்டியதில்லை.ஊடக அமைச்சர் என்பவர் ஊடகவியலாளர்களின் நலன், தொழிர்சார் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தக்கூடியவர் என்ற வகையில், நீங்கள் பொறுப்பு வகிக்கும் ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு ஊடக நிறுவனம், இவ்வாறு நடந்து கொள்வதை முன்னிட்டு நாம் கவலையடைகிறோம்.

இந்த அரசாங்கம் ஊடகத்துறை தொழில் சார்ந்தவர்களை மேம்படுத்தும் நோக்கில், ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி மற்றும் "எசிதிசி" புலமைபரிசு திட்டங்களை வழங்கி உள்ளதை நாம் பாராட்டுவதுடன், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட சம்பவமானது கண்டனத்துக்குரிய குற்றமாகவே நாம்ம் கருதுகிறோம்.

எனவே இது சம்பந்தமாக தலையீடு செய்து காரணத்தை கண்டறிவதுடன் எமது உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் அங்கத்தவரான மஞ்சுள சமரசேகவிற்கு நியாயத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :