உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது டுபாய்!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
முற்றிலும் 100% காகிதமற்ற அரசாங்கமாக மாறியுள்ளது டுபாய் என்று, டுபாய் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹாம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் அறிவித்துள்ளார்..

டுபாயில் கடந்த 2018ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன.

இதன் 5வது கட்டத்தின் முடிவில், டுபாயில் 45 அரசாங்க துறைகளும் காகிதமற்றவையாக மாற்றப்பட்டன. இதன்மூலம், உலகின் முதல் காகிதமில்லா அரசாங்கம் என்ற பெருமையை டுபாய் பெற்றுள்ளது. இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன.
இது 33 கோடியே 60 லட்சம் ஆவணங்களை சேமித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்...
இதுகுறித்து, டுபாய் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹாம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் பயணம். இது டுபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும். அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் இது ஒரு முன்மாதிரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.

இத்திட்டத்தின் மூலம், டுபாய் அரசாங்கத்திற்கு 1.3 Billion திர்ஹாம் அல்லது $350 Million ( சுமார் 8 ஆயிரம் கோடி ரூபா ) சேமிக்கப்படுவதுடன், ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான மனித வேலை நேரமும் மிச்சமாகிறது குறிப்பிட்டுள்ளார்!





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :