அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரிய பயிலுனர்களைப் பதிவு செய்யும் நிகழ்வு.



எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2020ஃ2021 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரிய பயிலுனர்களைப் பதிவு செய்யும் நிகழ்வு நேற்று (15) அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்குபற்றிய ஆசிரிய பயிலுனர்கள் 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இஸட்-புள்ளி (Z-Score) மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களாவர் இவர்கள் கணிதம், விஞ்ஞானம், விசேட கல்வி, வர்த்தகமும் கணக்கீடும், ஆரம்பக்கல்வி மற்றும் இஸ்லாம் ஆகிய பாடநெறிகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வருடத்துக்கான 203 ஆசிரிய பயிலுனர்களில் முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே பதிவு செய்யப்படுகிறார்கள். இவர்கள் பதிவின் பின் வழமை போலன்றி இம்முறை வீடு செல்ல அனுமதிக்கப்படுவர் அத்துடன் இவர்கள் வீடுகளில் இருக்கும் போது எதிர்வரும் 2021.12.20 ஆம் திகதியில் இருந்து நிகழ்நிலை (Online) மூலம் திசைமுகப்படுத்தல் (Oreantation) செயலமர்வு மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பீடாதிபதி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :