தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முறையியல் தொடர்பான விரிவுரைகள் ஆரம்பம்எம்.ஏ.றமீஸ், எம்.ஜே.எம்.சஜீத்-
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பட்டப் பின் கற்கைக்கான ஆய்வு முறையியல் சம்பந்தமான விரிவுரைகள் நேற்று(13) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்வறிமுக நிகழ்வு இணைய வழி சூம் தொழில்நுட்பத்தின் கீழ் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆய்வு முறையியல் விரிவுரைகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட முதல் நாள் விரிவுரையினை கலாநிதி மற்றும் முதுதத்துவமாணி ஆய்வுக் கற்கைகள் மாணவர்களுக்காக மேற்கொண்டார்.
வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் ஆய்வுக் கற்கை மாணவர்களுக்காக இடம்பெறவுள்ள இவ் ஆய்வு முறையியல் தொடர்பான விரிவுரைகள் தலைசிறந்த முன்னணி கல்வியலாளர்கள் மூலம் நிகழ்த்தப்படவுள்ளதாக மொழித்துறை தவிசு பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.

தொடராக இடம்பெறவுள்ள விரிவுரைகள் வரிசையில் எதிர்வரும் வாரங்களில் பேராசிரியர் கலிங்க ரியுட்டர் சில்வா, பேராசிரியர் கே.ஏ.பி.சித்தசேன, பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எம்.எம்.பாசில், கலாநிதி தம்மிக ஹேரத், கலாநிதி றஸாக் கனி உள்ளிட்ட தலைசிறந்த கல்வியலாளர்கள் விரிவுரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உரையாற்றுகையில், தென்கிழக்குப் பிராந்தியத்தில் உருவாக்கம் பெற்ற இப்பல்கலைக்கழகம் 25 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது. இக்காலப் பகுதியில் பல்வேறான சாதனைகளை இப்பல்கலைக்கழம் மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில், கலாநிதி மற்றும் முதுதத்துவமாணி தொடர்பான கற்கை நெறி ஆய்வுக் கற்கை மாணவர்களுக்காக விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்மை இப்பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மைல்கல்லாய் பார்ப்க்கப்படுகின்றது. சுமார் எண்பதிற்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொண்டு துறைசார் ஆய்வுகளை முன்வைக்கவுள்ளனர் என ஆய்வுச் செறிவு மிக்க உரையினை ஆற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :