பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு



மினுவாங்கொடை நிருபர்-
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. உயர் தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், 2022 பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கும், சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :