இலங்கை அரசுக்கு சவால் விடுக்கும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்!'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பிரதானி ஞானசார தேரர் நேற்றையதினம் ஜனாதிபதி ஊடக மையத்தில் உரையாற்றினார்.
அதன் போது நாட்டில் சிங்கள‌, த‌மிழ், முஸ்லிம் என்று பாட‌சாலைக‌ள் இல்லாம‌ல் ஒரே பாட‌சாலை என்று இருக்க‌ வேண்டும் என‌ ஞான‌சார‌ தேரர் தெரிவித்துள்ளார்.
இது முட்டாள்தனமான கருத்தாகும். இத்த‌கைய‌ முட்டாள்தனமான க‌ருத்தை சில‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ளும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் கூறியுள்ள‌ன‌ர்.
இத‌ற்கு நாம் தெளிவாக‌ ப‌தில் கொடுத்துள்ளோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

சிங்க‌ள‌, த‌மிழ், முஸ்லிம் பாட‌சாலைக‌ளை ஒழிக்க‌ வேண்டும் என்றால் நாடு முழுவ‌திலும் உள்ள‌ பாட‌சாலைக‌ள் அனைத்தும் ஆங்கில‌ மொழியில் இய‌ங்க‌ வேண்டும்.
அத‌னை செய்ய‌ அர‌சு த‌யாரா? என முபாரக் அப்துல் மஜீத் கோட்டாபய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :