பங்களாதேஷில் இடம்பெற்ற கபடி போட்டியின் சிறந்த ஆட்ட நாயகன் விருது இலங்கை வீரர் அஸ்லம் சஜாவுக்கு !!நூருல் ஹுதா உமர்-
ங்களாதேஷில் இடம்பெற்ற பிராந்திய கபடி சுற்றுப்போட்டியில் "Meghna கபடி கழக" அணிக்கு ஆடுவதற்காக இலங்கை கபடி அணியில் இருந்து நிந்தவூரை சேர்ந்த அஸ்லம் சஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடந்த மாதம் 25ம் திகதி அன்று பிராந்திய கபடி சுற்றுப்போட்டி ஆரம்பமானது. இப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (02) இடம்பெற்றது.

இப் போட்டியில் இலங்கை கபடி அணியில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட இரு வீரர்களும் பங்குபற்றிய "Meghna கபடி கழக" அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டதுடன் இறுதி போட்டியின் சிறந்த ஆட்ட நாயகன் விருதை இலங்கையை சேர்ந்த அஸ்லம் சஜாவுக் கிடைக்கப்பெற்றது. கடந்த மார்ச் மாதம் இலங்கை கபடி அணி சார்பாக பங்களாதேசில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் விளையாடிய அஸ்லம் சஜா அச் சுற்றுப்போட்டியின் அதி கூடிய புள்ளிகளை பெற்று சிறந்த Rider ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கை தேசிய கபடி அணி வீரரும், நிந்தவூர் மதினா தேசிய பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளரும் ஆவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :