சவளக்கடை ஏழாம்கிராமத்தில் கனடா ten டீப்பின் உலருணவு நிவாரணம்.வி.ரி.சகாதேவராஜா-
நாவிதன்வெளி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பின்தங்கிய ஏழாம்கிராம மக்களுக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணம் நேற்று(24) ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கிவைத்தார்.

கனடா நாட்டிலுள்ள ' ten டீப் ' நிறுவனம் இதற்கான நிதிஅனுசரணையை கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டுரையாற்றியதுடன் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தமை விசேட அம்சமாகும்.

கொரோனாத் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த ஒருதொகுதி(500குடும்பங்கள்) அம்பாறை மாவட்ட மக்களுக்கு 1மில்லியன் ருபா(10லட்சருபா) செலவில் உலருணவு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாகவே இது நடைமுறைப்படுத்தபட்டது.

வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளரும் பிரபல சமுகசெயற்பாட்டாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந் நிவாரணவிநியோகம் இடம்பெற்றது.
நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.சிறிரங்கன் ஆசிரியர்களான இராஜேந்திரன் . வாமதேவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கனடா நாட்டிலுள்ள ' ரு டீப் ' நிறுவனம் இதற்கான நிதிஅனுசரணையை கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலினூடாக வழங்கியுள்ளது.

முன்னதாக திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மண்டானை தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடிச்சாறு; திராய்க்கேணி மற்றும் அட்டப்பள்ளம் ஆகிய கிராம மக்களுக்கு இத்திட்டத்தின்கீழ் ஏலவே உலருணவு நிவாரணம் வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மக்கள்; கலந்துகொண்டு வழங்கிவைத்தனர். இறுதியில் கிராமமக்கள் நன்றியுரைத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :