போதையிலிருந்து புனர்வாழ்வுபெற்ற பஸ்தரிப்பு நிலையம்!வி.ரி.சகாதேவராஜா-
போதைப்பொருள் பாவனை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளின் கூடாரமாக செயற்பட்ட பஸ்தரிப்புநிலையமொன்று அவற்றிலிருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டு, வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் புனர்வாழ்வுபெற்ற பஸ்தரிப்புநிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த பஸ்தரிப்புநிலையம் காரைதீவு தேவாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ளது.
கடந்த கொரேனா காலங்களில் போதைப்பொருள் பாவனையுள்ளிட்ட சமுகவிரோத செயற்பாடுகளினால் ஆக்கிரமிப்புக்குள்ளான இப்பஸ்தரிப்புநிலையத்தை முற்றாக விடுவிக்கவேண்டுமென காரைதீவு பிரதேசசபையின் சுயேச்சகை;குழு உறுப்பினர் சதாசிவம் சசிகுமார், பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
தவிசாளர் ஜெயசிறில் உடனடியாக செயற்பட்டு, சம்மாந்துறைப் பொலிசாருடன் தொடர்புகொண்டு அவர்களை வரவழைத்து சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு நேற்றுமுன்தினம் சபையால் வர்ணம் பூசி புதுப்பொலிவுப்பெறச்செய்தார்.

தற்போது அப்பஸ்தரிப்புநிலையம் மக்கள் பாவனைக்காக புதுப்பொலிவுடன் காணப்படுவதையிட்டு உறுப்பினர் ச.சசிக்குமார் ,தவிசாளருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :