ஆசிய கிண்ண தகுதிகாண் உதைபந்தாட்ட போட்டியில் பங்கு பற்ற திருகோணமலை மாவட்ட இரு வீரர்கள் கட்டார் நாட்டுக்கு பயணம்எம்.ஏ.முகமட்-
ஆசிய கிண்ண தகுதிகாண் உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் கட்டார் நாட்டுக்கு (19) பயணமனார்கள்.
.
23 வயதின் கீழ் கட்டாரில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு கிண்ணியாவைச் சேர்ந்த ஜெஹ்பர் றிப்கான் முகமட் மற்றும் முஸாதிக் முகமட் முர்சித் ஆகிய இரு வீரர்களும் இப்போட்டியில் பங்கு பற்றவுள்ளனர்.
2022ஆம் ஆண்டு நடை பெறவுள்ள போட்டிக்கு இலங்கை அணியை தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டியாக 25ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை டோஹா சுகைம் பின் ஹம்தாத் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் இரு வீரர்களும் விளையாடவுள்ளனர்.
ஒக்டோபர் மாதம் மாலைதீவில் இடம் பெற்ற சார்ப் சம்பியன்சிப் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணியில் றிப்கான் முகமட் பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்து பயிற்சிகளை பெற்றார்.
இலங்கையின் தேசிய மற்றும் 23வயதுக்குட் பட்ட தேசிய உதைபந்தாட்ட அணிகளில் முன் கள வீரராக இடம் பிடித்துள்ளவராக றிப்கான் முகமட் அண்மைக் காலமாக இலங்கை உதைபந்தாட்டத்தில் பேசப் படும் வீரராக மாறியுள்ளார்.

இலங்கையை பொறுத்தளவில் கிழக்கு மாகாணத்தில் அதிகமான உதைபந்தாட்ட கழகங்கள் இருந்தாலும் இப் பகுதி வீரர்கள் இலங்கையின் முன்னணி கழகங்களில் விளையாடுவது மிகவும் குறைவு.அதனால் அந்தப் பகுதிகளில் திறமை இருந்தும் வீரர்கள் தேசிய அணிக்குள் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் கல்வி கற்ற
போது மாவட்ட,மாகாண மற்றும் தேசிய உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடி சம்பியன் கிண்ணத்தை பெற காரணமாக இருந்தார்.
2016ஆம் ஆண்டு தென்கொரியாவில் இடம் பெற்ற 44வது ஆசிய பாடசாலைகள் சம்பியன்ஷிப் உதைபந்தாட்ட போட்டியிலும், ஈரான் நாட்டில் இடம் பெற்ற 45வது சம்பியன்ஷிப் உதைபந்தாட்டப் போட்டியிலும், தஜஹிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற போட்டியிலும் இவர் பங்கு பற்றினார்..
அடுத்த வீரராக முஸாதிக் முகமட் முர்சித் கிண்ணியா மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர்.இவர் விளையாட்டுத்துறையில் திறமையானவர்.
மாவட்ட.மாகாண மற்றும் அகில இலங்கை ரீதியாக உதைபந்தாட்டப் போட்டிகளில் சம்பியன் கிண்ணங்களை சுவீகரிக்க காரணமாக இருந்தவர்.
19 வயதின் கீழ் இரு நாடுகளுக்குச் சென்று உதைபந்தாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.தற்போது 23வயதின் கீழ் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் கோல் காப்பாளராக கலந்து கொள்ள தெரிவு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இரு வீரர்களும் உதைபந்தாட்ட த்தில் கலந்து கொள்வதையிட்டு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் கிழக்கு மாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவர் ஏ.எல்.எம்.நபீல் ( ஆசிரியர்) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :