நீர் வழங்கல் அமைச்சின் திட்ட இணைப்பு அதிகாரியாக ராசிக் ரியாஸ்தீன் நியமனம்ஹஸ்பர் ஏ ஹலீம்-
நீர் வழங்கல் அமைச்சின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் திட்ட இணைப்பு அதிகாரியாக  ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனக் கடிதத்தை கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து இன்று (22) அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சரத் ரணசிங்க அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலகப் பகுதி,தோப்பூர்,தெகியத்தகண்டி ஆகிய பகுதிகளுக்கான திட்ட இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொது மக்களின் குடி நீர் இணைப்புக்கள் தொடர்பில் மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமையப் பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :