கனடா குளோபல் மெடிக் நிறுவனத்துடன் இணைந்து முஸ்லிம் எய்ட் சிறிலங்கா; 42000 பிளாஸ்டிக் முகப் பாதுகாப்புக் கவசங்களை வழங்கியது



னடா குளோபல் மெடிக் நிறுவனத்துடன் இணைந்து கொவிட் 19வைரசுக்கு எதிராக போராட முஸ்லிம் எய்ட் சிறிலங்கா 42000 பிளாஸ்டிக் முகப் பாதுகாப்புக் கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிற்கு வழங்குகின்றது


கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்காக கனடா 'குளோபல் மெடிக்' தனது உள்நாட்டு பங்காளர் நிறுவனமான முஸ்லிம் எய்ட் சிறிலங்கா ஊடாகஇலங்கை சுகாதார அமைச்சிற்கு அதன் முதற்கட்ட அவசரகால உதவியாக 42000 பிளாஸ்டிக் முகப் பாதுகாப்பு கவசங்களை வழங்குகின்றது. இந்த பிளாஸ்டிக் முகப் பாதுகாப்புக் கவசம் கொவிட் நோயாளிகளுடன் நேரடியாகச் சம்பந்தப்படுகின்ற சுகாதார ஊழியர்களாலும் முன்னணிச் செயற்பாட்டாளர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பத்து இலட்சம் முகக்கவசங்களை வழங்கவும் மேற்படி இரண்டு நிவாரண அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன.
ஏளிமையான கையளிப்பு நிகழ்வானது சுகாதார அமைச்சில் 2021 ஒட்டோபர் 18ம் திகதி நடைபெற்றது. சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் சிசேஷ்ட அதிகாரிகளுடன் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா பணிப்பாளர் பைசர்கான் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். முஸ்லிம் எய்ட் சிறிலங்கா குளோபல் மெடிக் நிறுவனத்துடன் பங்காளராக இணைந்து அவசரகால நிவாரணப் பணிகளை ஆற்றி வருவதையும் முஸ்லிம் எய்ட் இலங்கையில் மேற்கொண்டு வரும் வாழ்வாதார மேம்பாடு, கல்வி, நீர் மற்றும் சுகாதாரச் செயற்பாடுகளையும் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா பணிப்பாளர் அமைச்சருக்கு சுருக்கமாக விளக்கினார். முஸ்லிம் எய்ட் இன் செயற்பாடுகளை அமைச்சரும் விதந்து பாராட்டினார்.

கொவிட் 3வது அலை இலங்கையைத் தாக்கியபோது, ரூபாய் 3 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை முஸ்லிம் எய்ட் 12 வைத்தியசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தது. மேலும், கொவிட் இனால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் பல்வேறு மாவட்டங்களில் உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தது. அவ்வாறே, கொவிட் தடுப்பு தேசிய செயணிக்கு அதன் தலைவர் இராணுவ தளபதி ஊடாக சுகாதாரப்பொருட்கள் அடங்கிய பொதிகளை கொரண்டைன் நிலையங்களுக்கு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுகாதார அமைச்சு, தேசிய கொவிட் தடுப்பு செயலணி, என்ஜிஓ செயலகம் என்பவற்றுடன் இணைந்து முஸ்லிம் எய்ட் சிறிலங்கா கொவிட் இனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் வறிய குடும்பங்களுக்கு அவசர நிவாண உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

அவசரகால நிவாரணப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா கடந்த 15 வருடங்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :