மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொவிட் - 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு



பைஷல் இஸ்மாயில் -
திருகோணமலை சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொவிட் - 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வும், நோய் எதிர்ப்பு பானம் (சுவதரணி) வழங்கி வைக்கும் நிகழ்வு (29) வித்தியாலயத்தின் அதிபர் சரத் சேனசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கௌரவ கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சிந்தக்க விஜயவர்த்தண, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர், வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் கொவிட் - 19 தொற்று தொடர்பிலும், அதிலிருந்து நாம் பாதுகாப்புப் பெறுவது எவ்வாறு என்ற விளக்கத்தினை இன்றை விழிப்புணர்வு நிகழ்வின்போது வழங்கி வைத்தார்.
கப்பல்துறை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியர் சமல் அவர்களினால் கொவிட் - 19 தொற்று எவ்வாறு தொற்றுகிறது அதிலிருந்து தங்களையும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறவினர்களை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்ற வீடியோ காணோழியுடன் மிகத் தெளிவான விளக்கத்தையும் வளங்கி வைத்தார்.

இதன்போது, சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் மேடம் அவர்களினால், சுவதரணி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :