பாடசாலைகளில் தேங்கிக்கிடந்த குப்பைகூழங்கள் அகற்றப்பட்டமைக்கு நன்றி



வி.ரி.சகாதேவராஜா-
கொவிட் காலத்தில், கல்முனையின் பிரபல பாடசாலைகளில் அகற்றப்படாதிருந்த குப்பை கூழங்கள் இவ்வாரம் கல்முனைமாநகரசபையால் அகற்றப்பட்டன.

கல்முனை மாநகரசபை பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஸத் காரியப்பரிடம் , கல்முனை மாநகரத்திற்கான மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் விடுத்த வேண்டுகோள் காரணமாக இது நடைபெற்றது.

கல்முனை மாநகரிலுள்ள உவெஸ்லி உயர்தரபாடசாலை மற்றும் கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கொவிட்காலத்தில் குப்பைகள் அகற்றப்படாதிருந்தமை தொடர்பாக பாடசாலை நிருவாகங்கள் மாநகரசபையில் முறையிட்டிருந்தும் பலனளிக்காமல் போனதான் காரணமாக கல்முனை மாநகரத்திற்கான மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனிடம் முறையிடப்பட்டன.அவர் இதுவிடயத்தை கல்முனை மாநகரசபை பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஸத் காரியப்பரிடம் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு தெரியப்படுத்தினார்.

உண்மையில் இதுவிடயம் குறித்து தனக்கு இதுவரை தெரியாதென்று கூறி, மறுநாளே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தார்.

இவ்வாறு நீண்டநாள்களாக தேங்கியிருந்த குப்பைகூழங்கள் அகற்றப்பட்டதற்கு உவெஸ்லி அதிபர் செ.கலையரசன் உறுப்பினர் ராஜனுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :