ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் “அருணலு” வாழ்வாதார அபிவிருத்தி தேசிய வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில்நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்று (09.09.2021) நாடளாவிய ரீதியில் வீட்டுத்தோட்ட பயணாளிகளுக்கு வீட்டு தோட்டப்பயிர்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது இதற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு ஆரம்ப கட்டமாக வீட்டுத்தோட்ட விதை பயிர்கள் வழங்கப்பட்டன.
காகிதநகர் சமூக அபிவிருத்தி காரியாலயத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலக வி.தவராஜா கலந்துகொண்டதுடன் சமுர்த்தி திட்ட முகாமையாளர் எம்.பாஸ்கரன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.என்.எம்.ஷாஜகான் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.சியாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 900 குடும்பங்கள் விதை பயிர்கள் வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கட்டமாக 25 குடும்பங்களுக்கு இன்று பயிர் விதைகள் வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment