மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவை இடைநிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் - நாளை விசாரணை!



ட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை இடைநிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், அவற்றுக்கெதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.

தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், சந்தீப கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :