மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் அதிகவிலைக்கு சீமெந்துப் பைக்கற்றுக்களை விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்றினை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
240 சீமெந்துப் பைக்கற்றுக்களை கொள்கலன் ஒன்றில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த வர்த்தக நிலையத்தினை பொலிஸாரின் உதவியுடன் முற்றகையிட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் வர்த்தக நிலைய உரிமையாளரை எச்சரித்ததுடன்
அனைத்து சீமெந்துப் பைக்கற்றுக்களையும் தமது முன்னிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்எப். அன்வர் சாதாத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment