கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கல்வி பயிலும் பாடசாலை மாணவிகளுக்கு கற்பப்பை கழுத்து புற்று நோய்க்கான தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை ஆயிஷா பாலிகா வித்தியாலயம், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் தரம் 6ல் கல்வி பயிலும் எழுபத்தைந்து பெண் மாணவிகளுக்கு தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை வாழைச்சேனை ஆயிஷா பாலிகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
வளர்ந்து வரும் பெண் பிள்ளைகளுக்கு முப்பத்தைந்து வயதான போது கற்பப்பை கழுத்து புற்று நோய் தாக்கம் ஏற்படும் வகையில் அதனை ஆரம்பத்திலே தடுக்கும் நோக்கில் மாணவிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது.
குறித்த தடுப்பு மருந்து ஏற்றும் பணியில் பொதுச் சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment