நேற்று 17.09.2021 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி,மட்டக்களப்பு காத்தாங்குடி,ஏறாவூர் ஆகிய முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டங்கள் தொடராக இடம் பெற்றது.
கொவிட் தொற்று காரணமாக மிகவும் இறுக்கமான சுகாதார முறைப்படி நடைபெற்றது. இக்கூட்டங்களின் போது அபிவிருத்தி சம்பந்தமாக மீளாய்வு செய்யப்பட்டதோடு,2022 ஆம் ஆண்டுக்காண வரவு செலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் சம்பந்தமாக மக்கள் பிரதிநிதிகள்,அரச உத்தியோகத்தர்கள்,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைத்து தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment