இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் எம்.எச்.எம்.அஸீம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காலப்பகுதியில் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இளைஞர் சேவை அதிகாரி எஸ்.ஐ.எம்.பஸீல் தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி க.ஹிரிஸ்சானந், இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் எம்.எச்.எம்.அஸீம், இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழகத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment