தேர்தல் காலத்தில் அரிசி மூட்டைகளுடன் வந்த அரசியல்வாதிகளையும் காணவில்லை என மக்கள் அங்கலாய்ப்பு !!



நூருல் ஹுதா உமர்-
ணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் கிராமப்புற மக்கள் திண்டாடுவதாக கவலை தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் மதுபான சாலைகளை திறந்து வைத்ததன் மூலம் இல்லாத இயலாத வறிய குடும்பங்களுக்கு மத்தியில் குடும்ப பிணக்குகளை போதையில் அதிகரிக்க செய்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதே நேரம் அத்தியாவசிய பொருட்களான சீனி பால் மா போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக செல்லும் மக்களை பி சி ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை என்ற மாயையில் துரத்தி அடித்து ஓட்டம் காட்டும் அதிகாரிகள் சாராயத்தை கொள்வனவு செய்வதற்காக மதுபான சாலைகளை நாடிச் செல்லும் மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்ற மோசமான நிலைமையை காணக்கூடியதாக உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இவர்கள் பசி பட்டினி அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு உயர்வு போன்றவற்றினால் சொல்லொண்ணா கஷ்டங்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்
இந்த நிலையில் அரசாங்கத்தினால் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக குறிப்பிடப்பட்ட 2000 ரூபா வாழ்வாதாரத்திற்கான உதவித்தொகை கொடுப்பனவு கூட அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் உரிய மக்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியான மக்கள் பலர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக பல குடும்பங்கள் இக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தேர்தல் காலத்தில் அரிசி மூட்டைகளுடனும் ஆயிரம் ரூபாய் 2000 ரூபாய் பணத்துடனும் தமது குடிசைகளை நோக்கி ஏறி இறங்கிய அரசியல்வாதிகளை கூட இந்த கஷ்டமான காலத்தில் காண முடியவில்லை என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :