கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதனால் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் 30 வயதிற்கும் மேற்பட்டோருக்கான கொவிட் 19 முதல் கட்ட தடுப்பூசி ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதென கொட்டகலை பிரதேசசபை உறுப்பினர் பழனிவேல் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
60 வயதிற்கும் மேற்பட்ரோரருக்கு முதலாம் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்ற்றப்பட்டுள்ள போதிலும் 30 வயதிற்கும் மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றலை துரிதப்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
பல லட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ள போதிலும் நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
அந்த வகையில் கொட்டகலை பொது சுகாதா ர வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட வட்டகொடை, கிரேட்வெஸ்டன், ஒலிரூட், கூமுட், போகாவத்தை, மவுண்வோர்னன், ஆகிய ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இது வரையில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான முதலாம் கட்ட தடுப்பூசி இதுவரையில் ஏற்பட்டவில்லை இது தொடர்பில் சுகாதார தரப்பினரிடம் வினயவிய போது தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன் தடுப்பூசி ஏற்பட்டும் என்றும் தடுப்பூசி ஏற்ற நாங்கள் தயாராவே உள்ளோம் என தெரிவிக்கின்றனர்.
எனவே தனது உயிரை பணயம் வைத்து கொவிட் தொற்று காலத்தில் கடமையாற்றும், வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் சேவையை தடையின்றி முன்னெடுக்க நுவரெலியா மாவட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் தடுப்பூசி ளை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :
Post a Comment