கிண்ணியாவில் பல பிரதேசங்களில் இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கி வைப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
னநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீனினால் 300 இலவச குடிநீருக்கான இணைப்பை பெறுவதற்கான கட்டண ரிசீட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிண்ணியாவில் குறிஞ்சாக்கேணி, பூவரசந்தீவு, சூரங்கள் மற்றும் வான்எல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதி பிரதேச செயலாளர் பஹீமா றிஸ்வி, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் நிஜாம், கிண்ணியா பொலிஸ் பிரதிப்பொறுப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான நிஹார் ஸலாம், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களான கன்சுலா மற்றும் ஜிப்ரி ஆகியோருடன் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிண்ணியாவுக்கான மகளிர் அணித் தலைவி ஜரீனா ஆகியோருடன் பெண்கள் மனித உரிமை அமைப்பின் தலைவியும் சமூக சேவகியுமான நளீமா, ஊடகவியலாளர் இர்ஷாத் இமாமுத்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :