கிண்ணியா சுங்கான்குழி விவசாய அமைப்பின் நெற் செய்கைக்கான கூட்டம் (29) வயல் வெளியில் அவ்வமைப்பின் தலைவர்.ஏ.எஸ்.எம்.சுல்தான் தலைமையில் நடை பெற்றது.
பெரும் போக நெற் செய்கைக்காக எதிர்வரும் 6ஆம் திகதி நீர் திறந்து வைப்பதன்றும்,அதே நாளில் விதைப்பு ஆரம்பமாகி 15ஆம் திகதி முடிவடையுமென இக் கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும், இவ்வமைப்பு பிரிவில் 405 ஏக்கர் நிலப் பரப்பில் பெரும்போக (மானவரி) நெற் செய்கை இம்முறை செய்யப் படவுள்ளதாகவும் அவ்வமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் விவசாய அமைப்பின் செயலாளர்.வி.மதிவாணன், தலைவர் ஏ.எஸ்.எம்.சுல்தான் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment