ஏறாவூர் ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்களும் தாதிய உத்தியோகத்தர்களும் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்தம்.



சாதீக் அகமட்- 

கில இலங்கை ஒன்றினைந்த சுகாதார ஊழியர் சங்கம் 4 முக்கிய அம்சங்களை முன்வைத்து மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் நாடளாவிய ரீதியில் இன்று காலை 8:00 மணி தொடக்கம் நண்பகல் 12:00 வரை இடம்பெற்றது. இதன் ஒரு கட்டமாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்களும் தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து முக்கிய 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நான்கு மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

1= விசேட அனர்த்த (கொரோனா) கொடுப்பனவை வழங்கு. மேலும் கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கு.

2= 180 நாட்கள் பூர்த்தி செய்த சகல ஊழியர்களையும் பணியில் நிரந்தரமாக்கு.

3= வாரத்தில் 8 மணிநேர மேலதிக வேலைக்கு சம்பளத்தில் 1/30 வழங்கு.

4= சுகாதார துறையில் காணப்படுகின்ற ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்.

வழங்குவதுடன் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வை உடன் வழங்குமாறு கௌரவ ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களிடமும் சுகாதார அமைச்சர் அவர்களிடமும் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :