கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவலைப்பின் போது 45 தேக்கு மர குற்றிகளும்அதனை ஏற்றிவந்த வாகனமும் சந்தேக நபர் ஒருவரும் நேற்று இரவு (09.09.2021) புலிபாய்ந்தகல்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் என் நடேசன்தெரிவித்தார்.
வாழைச்சேனை வட்டார வன பகுதியில் சட்ட விரோதமரக் கடத்தல் இடம் பெறுவதை தடுக்கும் நோக்கில் வட்டார வன உத்தியோகத்தர் என்நடேசனின் வழிகாட்டலில் தொப்பிகல பகுதி வன உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.கியாஸின்தலைமையிலான பகுதி வன உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார் வனவிரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.எம்.சபீக், வன வெளிக்கள உத்தியோகத்தர்களான டி.என.; ஸ்ரீவர்த்தன மற்றும் எச்.எம்.ஐ.குமாரஆகியோர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது புலியபாய்ந்தகல் பாலத்திற்கு அருகில்வைத்து குறித்த மரங்களும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு அடி தொடக்கம் பத்து அடி வரையிலானநீளமுடைய 45 தேக்கு மர குற்றிகளும் டிப்பர் வாகனமும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்அவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் இவருடன் தொடர்புடையவேறு யாராவது இருகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வாழைச்சேனைவட்டார வன உத்தியோகத்தர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment