இதேபோன்று 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சைனோபார்ம் Sinopharm அல்லது இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய தடுப்பூசியை வழங்குவது சிறந்ததாகும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடனான சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயங்களை முன்வைத்துள்ளது. இந்த சந்திப்பு நேற்று (08) இடம்பெற்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சைனோபார்ம் தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பில் காணப்படுவதனால் இதனை பாடசாலை மாணவர்களுக்கும் ஏற்ற முடியும் என்று சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை ஒரு கோடி 4 லட்சம் பேருக்கு சீனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. என்பத்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான னோருக்கு சீனோபாம் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment