கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட நாவலடி - ரஹ்மத் நகர் பகுதியிலுள்ள பல வீதிகள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மழைநீர் அடித்துச் செல்லப்பட்டதால் குறித்த வீதிகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.
புனர்நிர்மாணம் செய்யப்படாமல் நீண்ட காலமாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் அவ் வீதிகளை பயன்படுத்துவோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், குறித்த வீதிகளிலுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பல வருடங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக வேண்டி பயணிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அத்துடன் வேறு பிரதேசங்களில் இருந்து வருவோர் குறித்த வீதிகளின் குழிகளில் விழுந்து செல்கின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகத்தினர் கவனமெடுத்து குறித்த வீதிகளை புனர்நிர்மாணம் செய்து மின் விளக்குகளை பொருத்தித் தருமாறு அப் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment