காட்டு யானை அச்சுறுத்தலுக்கு தீர்வு : விரைவில் யானை வேலி



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் மக்கள் மிக நீண்ட காலமாக காட்டு யானைகளின் தாக்கத்தினால் பல இன்னல்களை அனுபவித்து வந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளது.

காட்டு யானைகளினால் மஜ்மா நகர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பல அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டதோடு, 2018ம் தொடக்கம் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் தொடரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடமும், அரச அலுவலகங்களுக்கும் காட்டு யானைகளால் இப்பிரதேச எதிர்நோக்கும் இன்னல்களை மஜ்மா நகர் சமூக மட்ட அமைப்புக்களூடாக எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பயனாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பிரதேச செயலகம் மேற்கொண்ட தொடர்ந்தேர்ச்சியான முயற்சியினால் மஜ்மா நகர் பிரதேசத்தினை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்கான வேலி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கான பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்களான எம்.அஸ்ஹர், எம்.அஸ்வர், காணிப்பிரிவு உத்தியோகத்தர் எம்.முக்சீத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.சுபைர், எம்.நூர்தீன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளும் அதற்கான இடங்களைப் பார்வையிட்டனர்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகாரிகள், கிராம சேவகர்கள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் அல் மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.சமீம் பிரதேச மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :