மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தீவிரம் பொது போக்குவரத்து நிறுத்தம்



நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாகாணங்களுக்குள் உள்ளக பஸ்களை பயன்படுத்தி மாகாணங்களுக்குள் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் பண்டுக்கஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தி ,சுற்றுலா வங்கிச் சேவை ஊடகத்துறை விவசாயம் உட்பட அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு தமது அடையாள அட்டையைக் காண்பித்து அதன் மூலம் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தொடக்கம் கடுமையான முறையில் கண்காணித்து வருகிறார்கள். இதனால் அத்தியாவசிய மற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பொலீசார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :