நிந்தவூரில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்த மிக குறைந்த வருமானங்களையுடைய வறிய குடும்பங்களுக்கும், அங்கவீனமானோர்க்கும் இன் நிவாரணம் இன்று(2021.08.20) வழங்கப்பட்டது.
இன் நிவாரண பொருட்கள் யாவும் கொழும்பு நீலன் திருச்செல்வன் நம்பிக்கை நிதியத்தின் நிதி உதவியின் கீழ், நிந்தவூர் கிழக்கிலங்கை சமூக சேவைகள் நிலையத்தின் தலைவர் எம்.ஐ.எம். மன்சூர் , செயலாளர் எம்.எல்.லியாகத் அலி மற்றும் உறுப்பினர்களின் முயற்சியினால் இவ் வறிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்சார், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.பறூசா நக்பர், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். கே.எல்.எம் நக்பர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார் ஆகியோர் இதில் கலந்துகொண்டு நிவாரணங்களை வழங்கிவைத்தனர்.
0 comments :
Post a Comment