கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள தனியார் காணிகள் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமென கிழக்கு மாகாண இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய 03.08.2021 தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயின் ஆலோசனைக்கமைவாக இராணுவ தளபதியின் பணிப்புரைக்கிணங்க இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு- கும்புறுமூலை பகுதியில் கடந்த முப்பது வருடகாலமாக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுவந்த சுமார் 13 ஏக்கர் தனியார் காணியை உரிமையாளர்களிடம் மீளஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இதனைக்குறிப்பிட்டார்.
கும்புறுமூலை பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த சுமார் முப்பது ஏக்கர் தனியார் காணி ஏலவே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஞ்சிய மூவருக்குச் சொந்தமான பதின்மூன்று ஏக்கர் காணி தற்போது மீய ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன்,மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, பிறிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி, வாழைச்சேனை மற்றும் கிரான் பிரதேச செயலாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் உரையாற்றுகையில் - ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக நாட்டில் முன்னெடுக்கப்படும் சுபீட்சத்தின்நோக்கு திட்டத்தின்கீழ் மக்களின் பாதுகாப்பில் எவ்வித குறைபாடுகளுமின்றி மக்களை உரிய இடத்தில் வாழவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

0 comments :
Post a Comment