கொவிட் சவாலை வெற்றிக்கொள்ள பாகிஸ்தானிடமிருந்து கௌரவ பிரதமருக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு



பிரதமர் ஊடக பிரிவு-
லங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் அவர்கள் இன்று (21) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான ஒருதொகை வைத்திய உபகரணங்களை வழங்கினார்.
கொவிட்-19 சவாலை வெற்றிக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இவ்வாறு வழங்கப்பட்ட வைத்திய உபகரணத் தொகுதியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாசக் கருவிகள் (ventilators), 150 C-PAP செயற்கை சுவாசக் கருவிகள் என்பன உள்ளடங்கும்.
பிராந்திய மட்டத்தில் ஒன்றிணைந்து கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு பங்களிக்கும் விதமாக பாகிஸ்தான் சார்க் கொவிட்-19 அவசர உதவியின் (Pakistan’s SAARC COVID-19 emergency assistance ) கீழ் இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் இந்நன்கொடைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இரு நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :