கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இரண்டு நபர்கள் இன்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளதுடன், இம்மாதம் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.
இந்தவகையில் வாழைச்சேனை 5 ஹைறாத் வீதியில் வசிக்கும் 54 வயதுடைய பாடசாலையின் அதிபர் ஒருவரும், வாழைச்சேனை 4 ஹைறாத் குறுக்கு வீதியில் வசிக்கும் பெண்ணொருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மரணமடைந்துள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வியாழக்கிழமை 19ம் திகதி வரை நூற்றி நாற்பத்தொண்பது (149) கொரோனா தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் மணமடைந்துள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் சிறுசிறு கொத்தணிகள் உருவாகுவதற்கு ஒன்று கூடல்களே காரணமாகவிருந்தன. எனவே ஒன்று கூடல்களை முற்றாகத் தவிருங்கள். ஒன்று கூடுவதை முற்றாகத் தவிர்ப்பதன் மூலமே கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் தொற்று நோயைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். எனவே சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள் என கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment